Whatsapp-ல் இருக்கும் இந்த முக்கிய அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
)
வாட்ஸ்அப் சமீபத்தில் வியூ ஒன்ஸ் அம்சத்தை வெளியிட்டது. இதில் ஸ்னாப்சாட்டைப் போலவே, ஒரு பயனர் ஒரு படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையில், இவற்றை பகிர முடியும். ஒரு முறை பார்க்கப்பட்ட பிறகு அவை மறைந்துவிடும். புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும் போது, அங்கு கொடுக்கப்பட்டுள்ள '1' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
)
2021 இல் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டது. இந்த அம்சத்தின் உதவியுடன், யூ.எஸ்.பி டைப்-சி கேபிள் மூலம் உங்கள் அரட்டைகளை ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு அனுப்பலாம். WhatsApp செட்டிங்சில் இந்த விருப்பத்தை நீங்கள் காணலாம்.
)
இந்த மெசேஜிங் செயலியானது, 'WhatsApp Pay' என்ற சிறப்பு UPI அடிப்படையிலான கட்டண தளத்தையும் தொடங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி நீங்கள் WhatsApp சேட்டிலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பெறலாம்.
சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த அம்சத்தை பயனர்களும் மிகவும் விரும்புகின்றனர். இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் இப்போது உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை அடெண்ட் செய்யலாம்.
வாட்ஸ்அப்பின் இந்த அம்சமும் அற்புதமானது. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த மல்டி-டிவைஸ் அம்சத்தின் உதவியுடன், உங்கள் தொலைபேசியை இணையத்துடன் இணைக்காமல் பல சாதனங்களில் WhatsApp ஐ அணுகலாம்.