In Pics: இந்தியாவின் மிக அழகான, அற்புதமான கோவில்கள்
தஞ்சை பெரிய கோவில் என அழைப்ப்படும் பிருகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கோவில்கள் பட்டியலில் உள்ளது. இது தமிழ் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
பௌத்த மதத்தினை பின்பற்றும் மக்களுக்கு இந்த இடம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மதுரையில் அமைந்துள்ள அன்னை மீனாட்சி அம்மன் கோவில், இந்தியாவின் மிகச்சிறந்த கோவில்கலில் ஒன்று. பிரம்மாண்டமாக தோன்றும் இந்த கோவிலின் அற்புதமான கைவினைத்திறன் உலகை வியப்பில் ஆழ்த்துகிறது.
இந்த கோவில் 2005 ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் கட்டிட்ட அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோவில் காளி தேவி வீற்றிருக்கும் கோவில் ஆகும்.
இந்த கோவில் பஹாய் மதத்தை பின்பற்றும் மக்களின் வழிபாட்டுத் தலமாகும். இது 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன் அழகிய அமைப்பு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இமயமலைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த அற்புதமான கோவில் இந்து மதத்தின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில் ஆகும்.
சீக்கியர்களின் புனித மத ஸ்தலமான பொற்கோயில் 1577 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. சீக்கிய மதத்தை பின்பறும் மக்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த கோவில் ஆகும்.