குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ஒளிமயமான வாழ்க்கை ஆரம்பிக்கும்
குரு மேஷ ராசியில் இருந்து வெளியேறி ரிஷப ராசியில் நுழைவது மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். நிதி நன்மைகளைப் பெற பல வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்தி கிடைக்கலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.
குரு ரிஷப ராசியில் பெயர்ச்சியாகுவதால் நன்மைகள் கிடைக்கும். ஆண்டு முழுவதும் பலன்களைப் பெற பல வாய்ப்புகளைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் பெரிய சாதனைகளையும் மரியாதையையும் பெறுவீர்கள். புகழ் அதிகரிக்கும்.
குரு பெயர்ச்சி பல லாப வாய்ப்புகளை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு கூடும். மக்கள் மத்தியில் புகழ் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.
கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி கல்வி மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. பண விஷயத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படுத்தாது. வேலையில் பதவி உயர்வைப் பெறலாம். தொழில் வல்லுநர்கள் நிதி ஆதாயங்களையும் புதிய வாய்ப்புகளையும் பெறலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அனுகூலமான பலன் கிடைக்கும். பொன், பொருட்சேர்க்கை தொடர்பான சிந்தனை மேம்படும். இந்தக் காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் முன்னேற்றம் ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.