உதயமாகிறார் சனி: இந்த ராசிகள் மீது சனி அருள்..... ராஜவாழ்க்கை, பணக்கார யோகம் ஆரம்பம்

Sun, 03 Mar 2024-7:19 am,

சனி உதயத்தின் தாக்கத்தால் இந்த காலத்தில் துணிவையும் தைரியத்தையும் துணையாக கொண்டு பல வித காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். தேர்வுகளுக்காக நன்றாக தயாராவீர்கள். நிதி நன்மைகள் அதிகரிக்கும். சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

உதயமாகப்போகும் சனி பகவானால் நல்ல விஷயங்கள், சுபகாரியங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்

சனி உதயம் உங்களுக்கு கலவையான பலன்களை கொண்டு வரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். எனினும் இது தேர்வு நேரம் என்பதால் அதிகப்படியான கவனத்துடன் படிப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசி இணைத்து பிரச்சினைகளையும் சரி செய்து கொள்ளவும். வீட்டு வேலைகள் காரணமே இல்லாமல் தடைப்படும் அல்லது முடிக்கப்பட நேரம் எடுக்கும். பித்த கோளாறுகள் அதிகரிக்கலாம்.

கடக ராசிக்காரர்களுக்கு பேச்சில் கவனம் தேவை. இல்லை என்றால் பிறர் உங்களை தவறாக புரிந்து கொள்ள நேரிடலாம். மாணவர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே பெரிய முடிவுகளை எடுப்பது நல்லது. பணி இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு இந்த காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் குடும்ப பொறுப்புகளை நன்றாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். சட்ட ரீதியாக ஏதாவது சிக்கல்கள் இருந்தால் அதில் உங்களுக்கு ஏற்ற முடிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்

சனி உதயத்தால் உங்களுக்கு இந்த காலம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.

உங்கள் அறிவுத்திறனை வெளிக்காட்ட பல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சவால் மிகுந்த காலமாக இருக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் முன் வைப்பீர்கள். திருமண வயதில் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

கோபத்தை குறைப்பது நல்லது. யாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திருப்திகரமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதிநிலை நன்றாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழலை காண்பீர்கள்

சனி உதயத்தின் தாக்கம் காரணமாக இந்த காலத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம். நிதி நெருக்கடி ஏற்படலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். மற்றவரை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இது தேர்வு காலம் என்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரின் துணை கொண்டு அவர்களுடைய ஆதரவுடன் தன்னம்பிக்கை கொண்டு படிக்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பொருளாதார நிலை வலிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை

வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான காலமாக இருக்கும். இப்போது முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் இப்போது உள்ளது.

இந்த காலத்தில் சனி உதயத்தின் தாக்கத்தால் முக்கியமான சில பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link