2025 ஜனவரி மாத கிரகப் பெயர்ச்சிகளும்... அமோக வாழ்க்கையை பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்
ஜனவரி மாத பெயர்ச்சிகள்: 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் கிரகங்களின் ராஜாவான சூரியன் தை மாத பிறப்பில், ஜனவரி 14ம் தேதி மகர ராசியில் பெயர்ச்சியாகிறார். புதன் ஜனவரி 4ம் தேதி தனுசு ராசியிலும், ஜனவரி 24ம் தேதி மகர ராசியிலும் பெயர்ச்சியாக உள்ளது. மேலும், ஜனவரி 21ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் நுழைகிறார். மறுபுறம், சுக்கிரன் ஜனவரி 27 அன்று மீனத்தில் நுழைகிறார்.
ராகு மற்றும் சுக்கிரன் இணைவு: மாதத்தில் சில கிரகங்களின் சேர்க்கை நடைபெறுவதால் சுப, அசுப யோகங்கள் உருவாகின்றன. கும்பத்தில் சனி பகவான் நிலை காரணமாக ஷஷ ராஜயோகம் மற்றும் மீனத்தில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அதிர்ஷ்ட பலன்களைக் கொடுக்கும்.
புதன் மற்றும் சூரியன் சேர்க்கை: மகர ராசியில் புதனும் சூரியனும் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஜனவரி 28ம் தேதி சூரியன், சந்திரன், சூரியன் மகர ராசியில் இணைவதால் திரிகிரஹி யோகமும் உருவாகிறது.
அதிர்ஷ்ட ராசிகள்: ஜனவரி மாதம் உருவாகும் கிரகங்களின் சேர்க்கை மற்றும் சுப யோகங்களால் ஐந்து ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 2025 ஜனவரி மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: ஜனவரி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். தடைபட்ட பணிகள் மீண்டும் தொடங்கும். கடனாக கொடுத்த பணம் மீட்கப்படும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். திறனையான பணியை கருத்தில் கொண்டு உயர் அதிகாரிகள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றி யோசிக்கலாம். வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
மிதுனம்: ஜனவரி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. வேலையில், தொழிலில், சிறப்பான பலன்களைப் பெறலாம். வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெரும் லாபம் ஈட்டுவதில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள்.
சிம்மம்: ஜனவரி மாதம் சிம்ம ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற முடியும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். பயணம் செல்ல திட்டம் தீட்டலாம்.
கன்னி: 2025 ஜனவரி கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றிக்கான பாதைகள் உருவாகிக்கொண்டே இருக்கும். பதவி உயர்வுடன் சம்பளம் உயரவும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் தொலைதூர பயணம் செல்லலாம்.
துலாம்: 2025 ஜனவரி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். சமூகத்தில் மரியாதை கூடும். செல்வம், பொருள் இன்பத்தை அடையலாம். சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும். காதல் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.