செம்ம மாஸ் போன்; 20 GB RAM கொண்ட ZTE யின் புதிய ஸ்மார்ட்போன்

Mon, 05 Jul 2021-1:53 pm,

ZTE நிறுவன இயக்குனர்களில் ஒருவரான லு கியன் ஹௌ 20 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளார். இதில் அதிகபட்சம் 1000 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களை எதிர்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதா லு கியன் ஹௌ தெரிவித்தார்.

 

சமீப காலங்களில் ASUS மற்றும் Lenova போன்ற நிறுவனங்கள் 18 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ZTE உருவாக்கும் 20 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியை மேலும் கடுமையாக்கும் என தெரிகிறது. 

அன்டர்-டிஸ்ப்ளே செல்பி கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளிலும் ZTE ஈடுபட்டு வருகிறது. வரவிருக்கும் நேரத்தில், ZTE இன் ஸ்மார்ட்போனின் சாத்தியமான அம்சங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ZTE இன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ZTE ஆக்சன் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த சீரிஸின் சிறந்த மாடலான ZTE ஆக்சன் 30 அல்ட்ரா 5 ஜி 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுடன் சீனாவில் சுமார் 62,231 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link