புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு குபேர யோகம்..... சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சிகளால் பொற்காலம்
இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிட ரீதியாக இந்த அண்டு விசேஷமானது. இந்த ஆண்டில் ஒன்பது கிரகங்களின் ராசிகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டு முக்கிய கிரகங்களாக கருதப்படும் சனிபகவானும் குரு பகவானும் பெயர்ச்ச்சி அடைகிறார்கள். சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவற்றுடன் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2025 மார்ச் 29 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.
சுப கிரகமான குரு பகவான் 2025 மே மாதம் 14ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து விலகி, மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். குரு பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மற்றொரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆவார்கள். நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு மற்றும் கேது பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால், அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு 2025 வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இருந்தாலும் சரி, வியாபாரம் செய்தாலும் சரி அனைத்து வேலைகளிலும் இவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவார்கள். பொருளாதார நிலை முன்பு விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம்: சனி பகவான், குரு பகவான், ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கும். மேலதிகாரிகளின் அதிகபட்ச பாராட்டை பெறுவீர்கள். இதனால் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
கும்பம்: சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் விருத்தி அடைய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவியிடையே பரஸ்பர அன்ம் புரிதலும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.