Most Weird Restaurants: உலகின் விசித்திரமான ஹோட்டல்கள்! உணவு வேண்டுமா? ஆடையை அவிழ்!

Sat, 26 Feb 2022-2:50 pm,

பொது இடத்தில் ஆடை இல்லாமல் உணவு உண்ணும்படி சொன்னால், அது  மிகவும் விசித்திரமாகத் தோன்றும். ஆனால் லண்டனில் ஒரு உணவகம் உள்ளது, அங்கு ஆடைகள் அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாது!  உலகின் முதல் நிர்வாண உணவகம் 'தி பேசிக்' (Nude Restaurant, London) 2016 ஆம் ஆண்டு லண்டனில் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் உணவு சாப்பிடுவதற்கான ஆயிரக்கணக்கான மக்கள் முன்பதிவு செய்கிறார்கள்.  இங்கு பணிப்பெண்கள், சமையல்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள். அங்கு உணவு சமைப்பவராக இருந்தாலும், பரிமாறுபவரும் மட்டுமல்ல, உணவு சாப்பிட வருபவர்களும் ஆடைகளை அணியாதவர்களே!  

கழிப்பறை இருக்கையை கழிப்பறையில் மட்டுமே பயன்படுத்துவதை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த இருக்கையை சாப்பிடவும் பயன்படுத்தலாம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இப்படி ஒரு உணவகம் தைவானில் உள்ளது, அங்கு டேபிள் அல்லது நாற்காலியில் அல்லாமல், டாய்லெட் இருக்கையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். இதுமட்டுமின்றி, இங்கு உணவுகள் மற்றும் பானங்கள் கூட கழிப்பறை இருக்கை வடிவ பொருட்களிலேயே வழங்கப்படுகின்றன.

நியோடைமோரி உணவகம்  என்பது ஒரு பெண்ணின் உடலை உணவு தட்டாக பயன்படுத்தும் உணவகம். அதாவது ஒரு பெண்ணை நிர்வாணமாக படுக்க வைத்து, அவர் மீது உணவை பரிமாறுவார்கள். இந்த வித்தியாசமான உணவகத்தை (Most Weird Restaurants Of The World) பற்றிக் கேட்டாலே அதிர்ச்சியடைவீர்கள். 

இந்த உணவகத்தில், ஒரு பெரிய டைனிங் டேபிளில் சிறப்பு உணவான சுஷி சா சஷிமியை பெண்கள் மேல் வைத்து பரிமாறுவார்கள். இந்த பெண்ணை சுற்றி அமர்ந்து மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சாப்பிடுகின்றனர். ஜப்பானில் நிர்வாண உடலில் உணவு பரிமாறும் இந்த விசித்திரமான நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

சீனாவில் பல விசித்திரமான கருப்பொருள் உணவகங்கள் உள்ளன ஆனால் ப்ரிசன் தீம் உணவகம் (Prison Theme Restaurant, China) அதன் சிறப்பு சேவைக்காக அறியப்படுகிறது. இங்கே உங்களுக்கு சிறைக்குள் போடப்பட்டிருக்கும் மேஜையில் உணவு வழங்கப்படுகிறது. 

கைதி மற்றும் சிறைக்காவலரின் உடையில் பணியாட்கள் உங்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் செய்கிறார்கள். எந்த குற்றமும் செய்யாமல் சிறைக்காற்றை அனுபவிக்கலாம். இந்த மாமியார் வீட்டில் களி திண்ண வேண்டாம்,  சுவையான உணவுகளை சாப்பிட விரும்பினால், கண்டிப்பாக இங்கு செல்லுங்கள்.

அந்தரத்தில் தொங்கிக் கொண்டே உணவு உண்ண விருப்பமா? அதற்காக திரிசங்கு சொர்க்கத்திற்கு போகவேண்டாம்.... பெலியத்தில் வானத்தில் இருந்து தொங்கிக் கொண்டே சாப்பிடும் உணவகம் (Restaurant In Air, Belgium) உள்ளது. 

கிரேன் உதவியுடன், 50 மீட்டர் உயரத்தில் ஒரு டைனிங் டேபிள் காற்றில் தொங்கவிடப்பட்டுள்ளது, அங்கு மக்கள் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அங்கேயே உணவும் பரிமாறப்படுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link