அன்னையர் தினம் வந்தாச்சு..அம்மாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? சில சூப்பர் ஐடியாஸ்..
அன்னையர் தினம், வரும் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் உங்கள் அன்னையிடம் உங்கள் வாழ்வில் அவர் எது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதையும் தெரிவிக்கலாம்.
உயிரையே உங்களுக்கு கொடுத்த அன்னைக்கு, அன்னையர் தினத்தன்று ஒரு கிஃப்ட் கொடுப்பது பெரிய விஷயமா என்ன? இதற்கான ஐடியாக்களை இங்கு பார்ப்போம்.
Lunch Date:
உங்கள் அன்னையை அவருக்கு பிடித்த உணவகத்திற்கு அழைத்து சென்று, அவருடன் மதியம் அல்லது இரவு உணவு சாப்பிடலாம். இதனால் நீங்கள் பழைய நினைவுகளை அசைப்போட்டு உங்கள் உறவை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.
Watch:
ஒரு சில கிஃப்ட்கள், எத்தனை காலம் ஆனாலும் தொலையாமல் அந்த பந்தம் தொடர்வது போல தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அது போன்ற ஒரு பரிசுதான் கைகடிகாரம். இதையும் உங்கள் தாய்க்கு வாங்கி கொடுக்கலாம்.
Scent:
உங்கள் தாய்க்கு, நல்ல ரிச் நறுமனம் கொண்ட ஒரு செண்ட்-ஐயும் பரிசாக கொடுக்கலாம். பூ போன்ற நறுமனம், பழம் போன்ற நறுமனம் கொண்ட பல வகை வாசனை திரவியங்கள் விற்கப்படுகின்றன.
Power Bank:
உங்கள் தாயின் போனில் பேட்டரி தீர்ந்து விட்டால் எழுந்து போக வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அவருக்கு பவர் பேங்கை வாங்கித்தரலாம்.
நகைகள்:
கழுத்துக்கு செயின், கைக்கு மோதிரம், காதுக்கு கம்மல் போன்ற ஆபரணங்களை கூட உங்கள் தாய்க்கு வாங்கி கொடுக்கலாம்.