கீர்த்தி சுரேஷ் பாதி..தமன்னாவில் மீதி! யார் இந்த புது நடிகை? வைரலாகும் போட்டோஸ்..
)
தென்னிந்திய திரையுலகிற்கு புதிதாக வந்திருக்கும் நடிகை, பாக்கியஸ்ரீ போர்ஸ். தமிழ் படங்களில் இதுவரை நடித்திராத இவரை அதற்குள் தமிழ் ரசிகர்கள் வைரலாக்க ஆரம்பித்து விட்டனர்.
)
கடந்த ஆண்டு முதல் திரையுலகில் இருக்கும் இவர், இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில்தான் இதுவரை நடித்திருக்கிறார்.
)
பாலிவுட் நாயகன் கார்த்திக் ஆரியன் உடன் இவர் சேர்ந்து நடித்த சந்து சாம்பியன் திரைப்படம், இந்தியில் வெளியானது. இது இவரது இரண்டாவது படமாகும், முதல் படம், யாரியன் 2.
பாக்கியஸ்ரீ, இதுவரை 3 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதில், சமீபத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் இவர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடித்ததே மூன்று படம்தான் என்றாலும் அந்த படங்கள் அனைத்திலும் முன்னணி கதாநாயகர்களுடன்தான் ஜோடியாகி இருக்கிறார்.
அவுரங்காபாத்தில் பிறந்த இவர்,மகாராஷ்ட்ராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தேடி இன்னும் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
2024ல் பெரிதாக வைரலான கதாநாயகிகளுள் ஒருவராக இருக்கிறார், பாக்கியஸ்ரீ போர்ஸ். இதையடுத்து இவர் குறித்த இன்னொரு விஷயமும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பாக்கியஸ்ரீ போர்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இவர் பார்ப்பதற்கு பாதி கீர்த்தி சுரேஷ் போலவும் மீதி தமன்னா போலவும் இருப்பதாக கூறி வருகின்றனர்.