பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்..!
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து மீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் .
இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத நடிகை நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.
இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நாளை(ஜூன் 14) நடைபெறலாம் என கூறப்படுகிறது.