IPL 2023: தோனி சென்னை வரும் தேதி அறிவிப்பு..! சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி குஜராத் அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி சென்னை அணி அடுத்த மாதம் முதல் தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறது.
கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போது சென்னை வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர் சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொள்வதை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்
மார்ச் 2 ஆம் தேதி சென்னை வரும் தோனி, அடுத்த நாளான மார்ச் 3 ஆம் தேதி முதல் சேப்பாக்கத்தில் பயிற்சியை மேற்கொள்கிறராம்.
இந்த தகவல் இப்போது தீயாக பரவி சிஎஸ்கே ரசிகர்கள் சேப்பாக்கத்தை நோக்கி படையெடுக்க ஆயத்தமாகி வருகின்றனர்.