ராம் சரண்-எம்.எஸ் தோனி திடீர் சந்திப்பு..! காரணம் என்ன..?

Wed, 04 Oct 2023-6:05 pm,

ராம் சரண்-தோனி ஆகியோர் திடீர் சந்திப்பு. காரணம் என்ன? 

தெலுங்கு நடிகர் ராம் சரண் மும்பை சென்றுள்ளார். அப்போது அவர் தோனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. 

ராம் சரண், மும்பையில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் அவரது காரை சூழ்ந்து கொண்டனர். 

ராம் சரண், விநாயகர் கோவிலுக்கு குர்த்தா போன்ற கருப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தார். ரசிகர்களை பார்த்து கையசைத்தவாறு அவர் கோவிலுக்கு சென்றார். 

ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக எம்.எஸ்.தோனியின் புதிய போட்டோக்கள் வெளியாகியிருந்தன. தோனி, 2007ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் நீளமாக முடி வளர்த்து இருக்கிறார். 

புதிய ஹேர்ஸ்டைலில் உள்ள இவரது புகைப்படங்கள், தோனியின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இவரை பாலிவுட் மற்றும் கோலிவுட் ஸ்டார்களை வைத்து எடிட் செய்த போட்டோக்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link