In Pics: தியேட்டர்களை கலக்கும் சிம்புவின் ‘மாநாடு’..!!
சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாநாடு" திரைப்படத்தை வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கி உள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா (SJ Suryah), எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நேற்று, திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்ற அறிவிப்பினால் சோந்து போயிருந்த ரசிகர்கள், பின்னர் இரவு திரைப்பட ரிலீஸ் உறுதியானதை அடுத்து மிகழ்ச்சி அடைந்தனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மாநாடு (Maanaadu) திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக வேண்டி இருந்தது.
தீபாவளி அன்று ரீலீஸ் செய்வதாக இருந்த நிலையில், தன்னை நம்பி படம் வியாபாரம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப் படக்கூடாது. அதனால் மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி, நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முன்னதாக அறிவித்தார்.
திரையரங்குகளுக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்கிற உத்தரவை அடுத்து, தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி (Suresh Kamatchi) தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.