Marriage Scam: மணப்பெண்களே மணமகன்களாகவும் மாறினால்? அதிர வைக்கும் வெகுஜன திருமண வீடியோ!
)
திருமண மோசடி பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அரசு நலத்திட்டத்திற்காக ஏற்பாடு செய்திருக்கும் திருமணத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மோசடி அதிரவைக்கிறது. வீடியோக்கள் வைரலாகின்றன
)
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் நடந்த வெகுஜன திருமணத்தில் நடைபெற்ற மோசடி சம்பவம் பலரையும் திகைக்க வைக்கும். பல்லியாவில் அரசுத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெகுஜனத் திருமணத்தின் போது பல "மணப்பெண்கள்" தனக்குத் தானே மாலை அணிவித்து திருமணம் செய்துகொள்வதை சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள் காட்டுகின்றன
)
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திருமண செலவுகளை ஏற்றுக் கொள்ளும் "முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா", என்ற திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர வைக்கின்றன
உத்தரப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் வெகுஜனத் திருமணத் திட்டமான ‘முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா’, திருமணமான பெண்கள் மற்றும் கைம்பெண்கள்/ கைவிடப்பட்ட/விவாகரத்து செய்யப்பட்ட ஏழை/ஏழ்மையில் வாழும் பெண்களுக்கு அவர்களின் சமூக/மத நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின்படி திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் இது. சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், உத்திரப்பிரதேச அரசு, திருமணத்திற்கு ரூ.51,000/- செலவழிக்கிறது
திருமணத்திற்கு 51 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன
ஜனவரி 25 ஆம் தேதி பல்லியாவின் நடைபெற்ற சமூக திருமண நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருமணம் செய்துக் கொண்டவர்கள், முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டது
இந்த வீடியோ வைரலாகும் நிலையில், மாவட்ட சமூக நல அலுவலர் தீபக் ஸ்ரீவஸ்தவா புகார் அளித்துள்ளார். போலீஸ் புகாரின்படி, ஏற்கனவே திருமணம் ஆன மணமக்களுக்கு வெகுஜன திருமண நிகழ்வில் மீண்டும் திருமணம் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்
விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் உண்மைகளை மறைத்து திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற சட்டவிரோதமாக விண்ணப்பித்துள்ளனர்
இந்தத் திட்டத்தில், ஏற்கனவே திருமணமாகி தம்பதிகளாக வாழ்ந்து வருபவர்களும் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். பெண்கள் தங்களுக்குத் தாங்களே மாலை அணிவிப்பதும், அதை எப்படி செய்வது என்று ஒருவர் நின்று சொல்லிக் கொடுப்பதும், திடீரென ஒரு பெண் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியேறுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது