100 கோடி ரூபாய் கொட்டி கொடுத்து ஹர்திக்கை தூக்கிய மும்பை
ஐபிஎல் 2024 தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஹர்திக் பாண்டியா
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அவரை திடீரென திரைமறைவு வர்த்தகம் மூலம் மும்பை அணி வாங்கியது.
ஆனால் எவ்ளவு தொகை கொடுத்து வாங்கியது என்ற விவரம் மட்டும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இப்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி சுமார் 100 கோடி ரூபாய் ஏல பரிமாற்ற தொகையாக குஜராத் அணிக்கு கொடுத்து வாங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல் விதிமுறைகளுக்கு உட்பட்டே இவ்வளவு பெரிய தொகை கைமாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தொகையும் அதிகாரப்பூர்வமானது அல்ல.
குஜராத் அணி வருடாந்திர கணக்கை வெளியிடும்போது ஹர்திக் பாண்டியாவுக்காக வாங்கிய தொகை குறித்த விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.