ஷாம்பூவை தண்ணீரில் கலக்கிதான் யூஸ் பண்ணனும்! ஏன் தெரியுமா?
சமமான விநியோகம்:
ஷாம்பூவை தண்ணீரில் கலப்பதால், நமது தலையில் இருக்கும் அனைத்து முடிக்கும் ஷாம்பூவை படற வைக்க முடியும். இதனால் உச்சந்தலையும் சேர்ந்து சுத்தமாகும்.
மென்மையாக்கும்:
ஷாம்பூவில் இருக்கும் சர்பாக்டான்ட்கள், அதை அப்படியே தலையில் தேய்க்கும் போது முடியை கடினமாக்கும். இது ஆகாமல் தடுக்க, ஷாம்பூவை தண்ணீரில் ஊற வைக்கலாம். இதனால், முடி உடைவதையும் தடுக்கலாம்.
ஆழ்ந்த சுத்தம்:
ஷாம்பூவின் அளவு குறைவாக இருந்தாலும் அதை தண்ணீரில் கலக்கும் போது அதிகமாகும். இது, தலை முடியின் ஆழ்ந்த சுத்தத்திற்கு உதவும்.
குறைவான தயாரிப்பு கழிவுகள்:
ஷாம்பூவை அதிகம் பயன்படுத்த விரும்பாதோர், அதிகம் பயன்படுத்த முடியாதோர் இதனை தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். இதனால், ஷாம்பூவும் மிச்சம், பணமும் மிச்சம்.
ஆழ்ந்து அலசும்:
ஷாம்பூவை, தண்ணீரில் கலந்து குறைவாக பயன்படுத்தினாலும், தலைமுழுவதும் சுத்தமாக்கும். இதனால், புத்துணர்ச்சி உணர்வு மேலோங்கும்.
முடிக்கு ஏற்ப மாறுதல்கள்:
நம் முடிக்கு ஏற்ற அளவு, முடியின் நிலைக்கு ஏற்ற அளவு ஷாம்பூக்களை தண்ணீரில் கலந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
உச்சந்தலை பராமறிப்பு:
பல சமயங்களில், ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்ப்பதால் எரிச்சல் போன்ற உணர்வு உண்டாகும். இதனை, தண்ணீரில் கலந்து ஷாம்பூ தேய்ப்பதால் தவிர்க்க முடியும்
நீரேற்றம்:
ஷாம்பூவை தண்ணீருடன் கலப்பது, உங்கள் தலைமுடிக்கு கூடுதல் ஈரப்பதத்தை சேர்க்கும். குறிப்பாக நீங்கள் ஈரப்பதமூட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் நிச்சய பலன் கிடைக்கும்.