2025ல் ஆழமான மன அமைதியை பெற சிம்பிளான 7 பயிற்சிகள்!
தினமும் எழுந்தவுடன் 5-10 நிமிடங்களுக்கு உங்கள் வாழ்வில் இருக்கும் நல்ல விஷயங்கள் குறித்து மட்டும் யோசித்து பாருங்கள். இது, உங்களை பாசிடிவாக யோசிக்க செய்யும். கவலைகளையும் மறக்கச்செய்து மன அமைதிக்கும் வழிவகுக்கும்.
முடிந்த அளவிற்கு தினமும் 10 நிமிடங்களாவது தியானம் செய்து பாருங்கள். இது உங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை குறைத்து உங்களை உங்களுக்கே புதிய நபராக அறிமுகப்படுத்தி விடும்.
உங்கள் உடல் நலனும் மன நலனும் மிகவும் முக்கியம். எனவே உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்வது அவசியம். நேரத்திற்கு சாப்பிடுவது, சரும பராமரிப்பு, உடற்பயிற்சி என அனைத்தும் இதில் அடங்கும்.
உங்களுக்கு பழைய நினைவுகளால் ஏற்பட்டிருக்கும் வருத்தங்கள், பழி வாங்கும் எண்ணம் என எது மனதில் இருந்தாலும் அதை ஒரு கடிதமாக எழுதி கசக்கி போட்டு விடுங்கள். இப்படி உங்களுக்குள் இருக்கும் நெகடிவ் எண்ணங்களை வெளிவிட்டால் மட்டுமே உங்களால் நிம்மதியாக வாழ முடியும்.
உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டாம் என்றால், அதற்கு நோ சொல்ல பழகிக்கொள்ளுங்கள். அனைவரிடத்திலும் குறிப்பிட்ட எல்லைகளை பராமரிக்க வேண்டும்.
மன அமைதியை பெற இன்னொரு வழி, நமக்கு பிடித்ததை செய்வது. உங்களுக்கு படிக்க பிடித்தால் படிக்க வேண்டும், எழுத பிடித்தால் எழுத வேண்டும். இப்படி உங்களுக்கு பிடித்த விஷயங்களை தேடித்தேடி செய்ய வேண்டும்.
நீங்கள் தெய்வ நம்பிக்கை இருப்பவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உங்களை தாண்டி ஒரு சக்தி இருக்கிறது என நம்பினால், அதை தினம்தோறும் நம்ப ஆரம்பியுங்கள். அப்போது, உங்களால் உங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றாலும் அந்த சக்தி உங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உணர்வீர்கள்.