2025ஆம் ஆண்டில் ‘இந்த’ 7 திறன்கள் ரொம்ப முக்கியம்! நன்றாக சம்பாதிக்கலாம்..
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் அதனை எப்படி சமாளிப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். பல நிறுவனங்கள் தங்களின் தகவல்களை பாதுகாக்க, இதில் கைதேர்ந்த நபர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன.
முதலீடுகள், க்ரிப்டோ கரன்சி குறித்த புரிதல் உள்ளிட்டவற்றிற்கு மக்கள் கவனம் கொடுத்து வருகின்றனர். எனவே இதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு அந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பலரிடம் இருக்க வேண்டிய ஒரு திறன் இது. தலைமை தாங்கும் திறன் கொண்டுள்ளவர்கள், அனைத்து துறைகளிலும் தேவைப்படுவர்.
பயன்பாட்டாளர்களுக்கு ஏற்ற செயலிகளை உருவாக்க உதவியாக இருக்கிறது UX/UI திறன். இதைக்கற்றுக்கொண்டால் ஐடி துறையிலும் சாதிக்கலாம்.
பல நிறுவனங்கள், SEO மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. இது, அடுத்த ஆண்டில் பெரிதாக வளரப்போகும் முக்கிய திறன்களுள் ஒன்றாகும்.
AI-யின் வளர்ச்சி எண்ணிலடங்காததாக இருக்கிறது. இந்த திறன் அனைத்து துறைகளிலும் பயன்படுவதால் கண்டிப்பாக இதனை கற்றுக்கொள்ளுங்கள்.
பல நிறுவனங்கள், தரவு ஆராய்ச்சியாளர்களை தங்கள் நிறுவனத்தின் முக்கிய இடத்தில் அமர்த்துகின்றன. இந்த திறனுக்கு சம்பளமும் அதிகமாக வழங்கப்படுகிறது. தலைமையில் இருப்பவர்கள் முக்கிய முடிவை எடுக்க இந்த திறன்தான் உதவும்.