இன்டர்வியூ போறீங்களா? ‘இதை’ கொண்டு போனால் கண்டிப்பா செலக்ட் ஆகலாம்..

Wed, 28 Feb 2024-3:41 pm,

வேலை தேடுகையில், நேர்காணல்களை கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். எந்த நிறுவனத்திற்கு நேர்காணலிற்கு சென்றாலும், அது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த நேர்காணல்களுக்கு சில பொருட்களை எடுத்து சென்றால் மன தைரியம் கூடும். அந்த பொருட்களின் லிஸ்ட் இதோ!

சுய விவரக்குறிப்பை நேர்காணலுக்கு எடுத்து செல்ல எப்போதும் மறக்க கூடாது. அந்த சுய விவரக்குறிப்பு ஒன்றாக அல்லாமல் 2 அல்லது 3 ஆகவும் இருக்கலாம். டிஜிட்டல் சாதனங்களில் இதை வைத்துக்கொள்ளாமல், கையில் ஹார்ட் காபியாக வைத்துக்கொள்ளலாம். 

தண்ணீர் பாட்டில்களை, நேர்காணல்களின் போது மட்டுமல்ல எங்கு சென்றாலும் கையோடு எடுத்து செல்வது நல்லது. உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்து கொண்டிருப்பதால் நமக்கு மனதளவிலும் ஆற்றல் அதிகரிக்கும். எனவே, கையில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது.

உங்களது வேலைகளின் சாம்பிள்களை ஒரு ஃபைலாக தொகுத்து கையில் எடுத்துக்கொள்ளலாம். இந்த டிஜிட்டல் உலகில் பலர், தங்களது வேலைகளை லிங்க் ஆகவோ, பென் டிரைவிலோ வைத்துக்கொள்வதுண்டு. ஆனால், இதை கையிலும் ஒரு நகலாக வைத்துக்கொண்டால், உங்களது வேலைகளை நீங்களே எடுத்து காண்பிக்க உகந்ததாக இருக்கும். 

நேர்காணலுக்கு ஒரு நோட்பேட் மற்றும் பேனாவைக் கொண்டு செல்வது தொழில்முறை மற்றும் தயார்நிலையை நிரூபிக்க எளிய வழியாக இருக்கும். நேர்காணலின் போது குறிப்புகள் எடுப்பது, நேர்காணல் செய்பவரின் கேள்விகள் அல்லது நீங்கள் நினைவில் கொள்ள விரும்பும் பேசும் பாய்ண்ட்ஸ்களை  எழுதவும். இது, நீங்கள் உங்களது வேலையை எந்த அளவிற்கு மதிக்கிறீர்கள் என்பதை காண்பிக்கும். 

கைகளில், கைக்குட்டை அல்லது டிஷூ வைத்துக்கொள்வது தனிப்பட்ட சுகாதாரத்தை பேணிக்காக்க உதவும். துணியில் ஏதாவது கறை ஏற்பட்டாலோ, முகத்தில் வியர்வை வழிந்தாலோ அதை துடைத்துக்கொள்ள உதவும். இதனால், நீங்கள் நேர்காணலில் அமரும் போது ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம். 

உங்களுக்கு தேவையான பொருட்களை உங்களுடன் வைத்துக்கொள்வதற்கு சரியான வழி, கூடவே பேக்-பேக்கை வைத்துக்கொள்வது. இதில், உங்களுக்கு தேவையான பொருட்களை வைத்துக்கொள்வதால் பிறரிடம் உதவி கேட்பதை தவிர்க்கலாம். 

நேர்காணல்களின் போது எப்போதும் எடுத்துக்கொள்ள தவறக்கூடாத முக்கிய விஷயம், மன தைரியம். ரிசல்ட் எதுவாக இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வேலைகள் மீதும், உங்கள் திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து தைரியமாக நேர்காணல்களை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ளுங்கள். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link