டிசம்பரில் தமிழ்நாட்டில் உள்ள இந்த இடங்களுக்கு கண்டிப்பாக சுற்றுலா செல்லலாம்!
வால்பாறை
ஆனைமலை மலையில் இருக்கும் அழகிய இடம் வால்பாறை. இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பசுமையான இடங்கள் பல அமைந்துள்ளன. மேலும் பல்வேறு வனவிலங்குகளையும் இங்கு காணலாம்.
ஏற்காடு
சேலம் அருகில் அமைந்துள்ள ஏற்காடு குறைந்த பட்ஜெட்டில் குளிரை அனுபவிக்க ஏற்ற இடமாகும். ஆரஞ்சு தோப்புகள் முதல் காபி தோட்டங்கள் வரை பல இடங்களை இங்கு சுற்றி பார்க்கலாம்.
கொடைக்கானல்
பழனி அருகில் அமைந்துள்ள மற்றொரு அழகிய மலைத்தொடர் கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீர்வீழ்ச்சிகள் மற்றும் அழகிய ஏரிக்கு உள்ளன. படகு சவாரி, பிரையன்ட் பூங்கா போன்றவற்றை கண்டு மகிழலாம்.
சிறுமலை
திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள சிறிய மலைத்தொடர் சிறுமலை ஆகும். ஒருநாளில் சுற்றுலா சென்று வர ஏற்ற இடமாக சிறுமலை உள்ளது. இங்கு அழகிய மலையேற்றப் பாதைகள் மற்றும் சிறுமலை ஏரி உள்ளது.
குன்னூர், கோத்தகிரி
ஊட்டிக்கு செல்லும் வகையில் உள்ளது குன்னூர் மற்றும் கோத்தகிரி. இங்கு இயற்கை எழில் மிகு பல இடங்கள் உள்ளன. தேயிலை தோட்டங்கள், டால்பின் நோஸ், லாம்ப்ஸ் ராக், எல்க் நீர்வீழ்ச்சி போன்றவற்றை கண்டு அனுபவிக்கவும்.
ஊட்டி
ஊட்டியில் சுற்றிப்பார்க்க பல அழகான இடங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர் மாதம் அங்கு அதிக குளிர் இருக்கும் என்பதால் இதனை அனுபவிக்க நிறைய சுற்றுலா பயணிகள் இங்கு செல்கின்றனர்.