சுகர் லெவலை குறைக்க சுலபமான வழி: இதை குடிங்க போதும்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுகளில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற புரிதல் வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நெல்லிக்காய் சாறில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. இது ஒரு சூப்பர் ஃபூட் ஆகும். இது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, இரத்த குளூக்கோஸ் அளவை குறைக்கிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள குர்குமின் பல வித நோய்களுக்கு நிவாரணமாக அமைகின்றது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் மஞ்சள் பால், மஞ்சள் நீர் ஆகியவற்றை உட்கொள்வதோடு உணவிலும் இதை சேர்த்து உட்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆயுர்வேதத்தில் வேம்பு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. பல நோய்களுக்கு இது ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள உயிர்வேதியியல் கலவைகள் நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. தினமும் காலையில் வேம்பு நீரை குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
கிரீன் டீ உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக ஏற்றது. கிரீன் டீயை தினமும் உட்கொள்வதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும் இதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இலவங்கப்பட்டையில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதோடு இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க உதவுகிறது. இலவங்கப்பட்டை நீர் குடிப்பது மட்டுமல்லாமல் பிற பானங்களிலும் இலவங்கப்பட்டையை சேர்க்கலாம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மூலிகை நீராக உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தய நீர் ஒரு அருமருந்தாக பயன்படுகின்றது. இதை இரவில் ஊற வைத்து காலையில் இதன் நீரை குடித்து வந்தால், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ட்ரைகோனெல்லின் போன்ற கூறுகள் உள்ளன, இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.