யூரிக் அமிலத்தை அடக்க, மூட்டு வலியை முடக்க உதவும் பச்சை இலைகள்
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். இது மூட்டு சேதத்தின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றது. யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது. ஆனால், சில சமயங்களில் இதன் அளவு அதிகமாகிறது.
பல இயற்கையான வழிகளில் யூரிக் அமில அளவை நாம் கட்டுக்குள் வைக்க முடியும். இதில் சில இலைகள் நமக்கு உதவுகின்றன. யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இலைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரிக் அமிலம் அதிகமாவதை தடுக்க பல வழிகள் உள்ளன. யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த பல மருந்துகள் இருந்தாலும், இயற்கையான வழியில் இதை கட்டுப்படுத்த விரும்பினால், அதற்கு கொத்தமல்லி இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து, அதை அரைத்து பின் தண்ணீரில் கலந்து பருகவும்.
வேப்பிலை உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. இதை தினமும் உட்கொள்வதால், உடலில் உள்ள நச்சுகளை எளிதாக நீக்கலாம். தினமும் வேப்பிலையை உட்கொள்வது யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது தவிர, வேப்பிலை உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
வெந்தயக் கீரை அதிக அளவு யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை அப்படியே மென்று சாப்பிடலாம், அல்லது தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம். இதை மற்ற உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். வெந்தயக்கீரை யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, நச்சுகளை நீக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
முருங்கைக்கீரையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் செல்களை சேதப்படுத்தி வீக்கத்தை ஊக்குவிக்கின்றன. ஆகையால் முருங்கைக்கீரையை குடிப்பது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது.
வெற்றிலையின் சாறு இரத்தத்தில் உள்ள யூரிக் அமில படிகங்களை அகற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலின் பல பிரச்சினைகளுக்கு வெற்றிலை தீர்வாக அமைகின்றது. இதை சரியான முறையில் உட்கொண்டால் யூரிக் அமிலத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம். இதை பச்சையாக மென்று சாப்பிடுவது சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்.
துளசி: துளசி இலைகளை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் உள்ள கழிவுகள் வேகமாக வெளியேறுகின்றன. துளசியில் உள்ள பண்புகள் உடலில் யூரிக் அமிலம் சேர்வதைத் தடுக்கின்றன. தினமும் 4 முதல் 5 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை எளிதாக கட்டுப்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.