அஸ்த நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகும் கேது யாருக்கு நல்லது செய்வார்?
அஸ்த நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு கேது பெயர்வதற்கு காரணம் ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர கதியில் இயங்குபவர்கள் என்பது தான். அதாவது ராசி மண்டலத்தில் இடமாக சுற்றுவதால், நிழல் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிமண்டலத்தில் கீழ் நோக்கியே இருக்கும். அதாவது தற்போது மூன்றில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு பெயரும் கேதுவின் அடுத்த பெயர்ச்சியின்போது முதல் பாதத்திற்கு கேது மாறுவார்
கேதுவின் நட்சத்திரம் பாதம் மாற்றம் கூட மிகப் பெரிய மாற்றங்களை செய்யக்கூடும் என்பதால் இந்த நட்சத்திர பாதப் பெயர்ச்சியும் முக்கியமானது தான்
மேஷ ராசிக்காரர்களின் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும், பணப் பற்றாக்குறையை உணர்ந்தாலும் அதை புத்திசாலித்தனமாகவும் கடின உழைப்பாலும் சீர் செய்ய கேது உதவுவார். வெற்றியின் உச்சத்தை அடைய கேதுவின் அருள் கிடைக்கும்
விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் ஆன்மிக விருப்பத்தை கொண்டு வரும் கேது, சடங்குகளை பின்பற்ற முயற்சிக்கும் எண்ணத்தைக் கொடுப்பார். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, வெளியூர் பயணங்களினால் நல்ல மாற்றம் உண்டாகும்
படைப்பாற்றல் அதிகரிக்கும் என்பதும் நேர்மையான முடிவுகளை எடுக்க கேது புத்தியைத் தருவர் என்பதும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மையாக இருக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் வேலைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு கேதுவின் நட்சத்திர பாத பெயர்ச்சி நன்மைகளைத் தரும். மனதில் உறுதி அதிகரிக்கும். விட்டு போன வேலைகளை முடிக்கும் ஆற்றலை கேது கொடுப்பார்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது