நயன்தாரா முதல் சமந்தா வரை ஹனிமூனுக்கு சென்ற இடங்கள்
சமந்தா - நாகசைதன்யா திருமணமும் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோவாவில் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்கு லண்டன் சென்றனர்.
பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள ராம்சரண், உபாசனா என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக இத்தாலி சென்றனர்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதி தேனிலவுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்த ஆண்டு கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட, காஜல் அகர்வால் தேனிலவுக்கு மாலத்தீவு சென்றனர்.
ஜூனியர் என்டிஆர் திருமணம் மிகமிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தென்னிந்திய பிரபலங்களிலேயே மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் என்று கூட சொல்லலாம். இந்த தம்பதி தேனிலவு கொண்டாட மொரீஷியஸுக்குச் சென்றனர்.
அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டியை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் தேனிலவுக்கு சிங்கப்பூர் சென்றார்.