நாவில் எச்சில் ஊற வைக்கும் நயன்தாராவின் 5 birthday cakes
ஐந்து கேக்குகள் இருந்தாலும், நடுவில் இருந்தது பெரிய சாக்லேட் கேக் தான். French macaroons, Ferrero Rocher chocolates மற்றும் nuts என கலக்கலாக இருந்த கேக், எப்போது தன்னை நயன் சாப்பிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தது…
Dessert lover நயன்தாராவுக்கு இனிப்புப் பொருட்களை சாப்பிடப் பிடிக்குமாம்… பிறந்தநாளன்று, ஒன்றல்ல, இரண்டல்ல ஐந்து கேக்குகள் மேஜையில் வைக்கப்பட்டன. சாக்லேட் கேக், சிவப்பு வெல்வெட் கேக், வெறும் சாக்லேட் கேக், ஜெல்லி கேக் மற்றும் இன்னும் ஒரு கேக் இருப்பதை பார்க்கலாம். மகளின் பிறந்தநாளை இப்படி கேக் மயத்துடன் நயனின் பிறந்தநாளை இனிப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர் டயானாவின் பெற்றோர். நயன்தாராவின் அசல் பெயர் டயானா…
அழகான நயன்தாராவின் பேரழகான பெற்றோர் வீட்டை அருமையாக அலங்கரித்திருந்தனர். மேஜையில் பூக்கள் நிறைந்திருந்தன. சுவர்களில் தீபாவளி விளக்குகள் பிரகாசமாய் எரிந்தன.
வெள்ளை மற்றும் தங்க நிற பலூன்கள் அறையை நிறைத்திருந்தன. அவர்கள் சுவரில் Happy Birthday Mol என பிறந்தநாள் வாழ்த்துக்களை அருமையாக பொருத்தியிருந்தனர்.
நயன்தாராவின் அருமைக் காதலர் விக்னேஷ் சிவன், பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். “எவ்வளவு இனிமை! அம்மா, அப்பா மற்றும் லெனு குரியன் ஆகியோரிடமிருந்து இது போன்ற ஒரு அழகான ஆச்சரியம் என்று தனது தங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களால் சொக்கிப் போனார் சந்தோஷ் சிவன்.
மலர்கள் சூழ்ந்த அறையில் பூவாய் பூத்து நிற்கும் நயன்தாராவிற்கு. violet asters கொண்ட ஒரு பெரிய பூச்செண்டு வழங்கப்பட்டது. ஒரு பூ, பூச்செண்டை வாங்கிக் கொண்டதே!!!
தனது ஆருயிர் காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்பட டீஸரை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். நெற்றிக்கண், பிளைண்ட் (Blind) கொரிய திரைப்படத்தின் ரீமேக் ஆகும்…