தொப்பை கொழுப்பை இரு மடங்கு எரிக்கும் ஆற்றல் கொண்ட... நெகடிவ் கலோரி உணவுகள்
கலோரி அளவு: நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு, ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு செரிமானம் ஆகி எரிக்கப்படும் போது உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது.
மெட்டபாலிசம்: வளர்ச்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் சிறப்பாக இருந்தால், உணவுகள் சிறப்பாக ஜீரணமாகி, அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலில் உள்ள கொழுப்பு அனைத்தும் கரைகிறது. அந்த வகையில் சில நெகட்டிவ் கலோரி உணவுகள், அதன் கலோரி திறனை விட அதிக கலோரிகளை எரித்து, கொழுப்பை கரைத்து விடும். ஏனெனில் நெகடிவ் கலோரி உணவுகளை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும்.
வெள்ளரி: ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய், சிறந்த நெகட்டிவ் கலோரி உணவாகும். 100 கிராம் வெள்ளரியில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதிக கலோரிகளை எரித்து உடல் கொழுப்பை கரைக்கிறது.
ப்ரோக்கோலி: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் அதிக கரோலிகளை எரிக்கும் திறன் கொண்டவை. இதில் ப்ரோக்கோலி வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
கேரட்: கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான வைட்டமின் ஏ நிறைந்த கேரட், அதிக கலோரிகளை இருக்கும் ஆற்றல் கொண்ட அற்புத உணவு. வைட்டமின் ஏ தவிர, இதில் பொட்டாசியம் மெக்னீசியம் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது.
தக்காளி: உணவிற்கு புளிப்பு சுவை வழங்கும், தக்காளி நீர்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்த அற்புத உணவு. எதிர்மறை கலோரி என்னும் நெகட்டிவ் கலோரி உணவான தக்காளி, அதிக கலோரிகளை எரித்து கொழுப்பை கரைக்கும்.
ஆப்பிள்: பெக்டின் நிறைந்த ஆப்பிளில் கரையும் நார்ச்சத்து உள்ளது. உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் திறன் பெற்ற ஆப்பிள் அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால் தானோ என்னவோ, தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தர்பூசணி: அதிக கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்ட பழங்களில், கோடைகால பழமான தர்பூசணியும் அடங்கும். லைகோபின் நிறைந்த தர்பூசணி, நீர் சத்தை அள்ளி வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 100 கிராம் தர்பூசணியில் 30 கலோரிகள் மட்டுமே உள்ளன.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.