சனி உதயம் 2023, இந்த ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடி ஏற்படும்

Sat, 25 Feb 2023-8:24 am,

ரிஷப ராசி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் அசுப பலனை ஏற்படுத்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

கன்னி ராசி சனியின் உதயம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகள் கூடும். அதிக பண பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.

விருச்சிக ராசி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் கலவையான பலனை தரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் இருந்த அமைதி குறையும்.

மகர ராசி சனி உதயத்தால் உங்களின் தொழில் வாழ்க்கையில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தி தரும். உங்கள் தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்களுடன் தகராறு ஏற்படலாம். 

 

மீன ராசி  திருமண வாழ்வில் தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தொழில் செய்பவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link