நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு அதிர்ச்சி! நிறுவனத்தின் மிக மலிவு சந்தா திட்டம் ரத்து
நெட்ஃப்ளிக்ஸ் ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும், இது உலகம் முழுவதும் பிரபலமானது. இருப்பினும், கடந்த 2-3 ஆண்டுகளில் நிறுவனம் வருவாய் குறித்து சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தனது அடிப்படை திட்டத்தை கனடா மற்றும் இங்கிலாந்தில் இருந்து ரத்து செய்யும்.
வருவாய் அறிக்கைகளின் முடிவில் இந்த பெரிய முடிவை நெட்பிளிக்ஸ் எடுக்க இருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் அறிக்கைகளில், நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) இன் மொத்த சந்தா கணக்குகளில் 40 சதவீதம் அடிப்படை கணக்குகள் உள்ளன. அவை விளம்பர ஆதரவு பெற்றவை.
வருவாய் அதிகரிக்க, நிறுவனம் இந்த அடிப்படை திட்டத்தை ரத்து செய்யப் போகிறது. சில நாடுகளில் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த திட்டம் முழுமையாக அகற்றப்படும்.
நெட்ஃப்ளிக்ஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் சில நாடுகளில் அடிப்படை திட்டத்தின் விலையில் அதிகரிப்பு செய்தது. முதலில் அடிப்படை திட்டத்தின் விலை 10 அமெரிக்க டாலர்கள் மற்றும் 7 யூரோ ஆக இருந்தது.
அதன் பிறகு அக்டோபரில் இந்த திட்டத்தின் விலை 12 அமெரிக்க டாலர்கள் மற்றும் 8 யூரோ ஆக மாற்றப்பட்டது. கூடுதலாக, கடந்த ஆண்டு ஜூலையில் பல புதிய சந்தாதாரர்களுக்கு அடிப்படை திட்டத்தை அகற்றியது.
நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் இருந்து அடிப்படை திட்டத்தை அகற்றுமா இல்லையா என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் அடிப்படை திட்டத்தின் விலை 199 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் HD வீடியோ தரம் கிடைக்கிறது.