‘கட்டா குஸ்தி’ ‘டாக்டர்’மேலும் 5 தமிழ் நகைச்சுவை படங்கள் இந்த வாரம் நெட்ஃபிக்ஸில் !!!
‘சந்திரமுகி’ 2 வடிவேலு, ராகவா லாரன்ஸ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இணைந்து நடித்த த்ரில்லர் கலந்த நகைச்சுவைமிக்க பொழுதுப்போக்கு படம். இந்த படம் முதலில் சந்திரமுகி ஒன்றில் ஜோதிகா, நயன்தாரா மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்த மாபெரும் சூப்பர் ஹிட் படம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது. இதனால் சந்திரமுகி பாகம் 2 எடுத்தனர். சந்திரமுகி ஒன்றைவிட 2 ஒப்பிட்டுப் பார்த்தால் முழுவதும் நகைச்சுவைமிகுந்த படமாகும். ராகவா லாரன்ஸ் மற்றும் முக்கிய கதாப்பாத்திரமான வடிவேலு சிறந்த காமெடியை கொடுத்துள்ளார்.
‘கட்டா குஸ்தி’ படம் விஷ்னு விஷால் மற்றும் ஐஷ்வர்யா லக்ஷ்மி இணைந்து ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் காமெடி கலந்த காதல் படமாகும். இந்த படத்தைப் பார்த்து சிரிக்காதவர்களே இல்லை, இப்படத்தினை நீங்கள் நெட்ஃபிக்ஸில் கண்டு மகிழுங்கள்.
‘டாக்டர்’ படத்தினை பிடிக்காதவர்கள் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். அனைத்துக் குடும்பங்கள் உட்பட சிறியவர் முதல் பெரியவர் வரை அதிகமாக விரும்பி ரசித்துப் பார்க்கும் படம் இது. இதில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் சிவக்கார்த்திகேயன் ஆகியோர் நடித்த படம். இவர்களின் காமெடிகள் கண்களில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிப்பு வந்துகொண்டே இருக்கும். படத்தில் முழுக்க முழுக்க காமெடி அதில் உள்ள அர்த்தம் மனதை யோசிக்க வைக்கும். நீங்கள் இப்படத்தினை நெட்ஃபிக்ஸ் கண்டு ரசியுங்கள்.
‘காஞ்சுரிங் கண்ணப்பான்’ நீங்கள் இந்த படத்தினைப் பார்க்க தவறியிந்தால் கண்டிப்பாக பாருங்கள், காமெடியில் த்ரில்லர் கலந்த நகைச்சுவை படம்.இப்படத்தின் இயக்குநர் செல்வன் ராஜ் சேவியர் சிறப்பாக இயக்கியுள்ளார். இந்த படம் அனைத்துப் பார்வையாளர்களையும் கவரும், இதில் காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இந்த படத்தினை தவறாமல் பார்த்து ரசிக்க நெட்ஃபிக்ஸ் உங்களுக்கு இனிய வாய்ப்பை கொடுத்துள்ளது.
‘சம்டைம்ஸ்’ இப்படத்தில் கில்லி பட வில்லன் பிரகாஷ் ராஜ் காமெடி நடிகனாக நடித்துள்ளார். அசோக் செல்வன் மற்றும் ஸ்ரீயா ரெட்டி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்த காமெடி ஹிட் படம். நெட்ஃபிக்ஸில் வெளியாக இருக்கும் இந்த படத்தை பார்க்க தவறாதீர்கள்.
‘ஜப்பான்’ இப்படத்தின் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட காமெடி படம். இப்படத்தின் பெயர் மட்டும் ஜப்பான் ஆனால் காமெடி அனைத்தும் தமிழ் காமெடிகள். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரியாணி படத்தின் நடிகர் கார்த்தி இதில் வேற லெவல் காமெடி செய்துள்ளார்.
‘தீரா காதல்’ ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து நடித்த காமெடி கலந்த காதல் கதைப்படம். இந்த படம் இந்த வாரம் நெட்ஃபிக்ஸில் வெளியாக உள்ளது. நீங்கள் பார்க்க மிஸ் பண்ணிருந்தால் நெட்ஃபிக்ஸில் கண்டு ரசிக்கலாம்.