டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது இனி ஈஸி - வரப்போகும் மிகப்பெரிய மாற்றம் இதுதான்
மிகவும் பரபரப்பான காலகட்டத்தில் இருக்கும் நாம் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால் நிரந்த முகவரிக்கு சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டியுள்ளது. இதை மாற்ற போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓட்டுநர் உரிமம் செயல்முறையை எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து துறை பரிசீலனை செய்து கொண்டிருக்கும் நிலையில், அந்த அப்டேட் தான் இப்போது வெளியாகியுள்ளது. நிரந்தர முகவரியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்படும் நிலையில், இனி தற்காலிக முகவரியில் வசிப்பவர்களுக்கும் ஓட்டுநர் உரிமம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வேறு ஊரில் வசித்தாலும் அங்கு இருக்கும் இடத்திலேயே இனி டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொள்ளும் வகையில் புதிய விதிமுறைகள் மாற்றம் வரப்போகிறது. இந்த வதிமுறை மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களுக்கு மிகப்பெரிய ஹேப்பி நியூஸாக இருக்கும்.
குறிப்பாக வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு. ஏனென்றால் எங்கு வசித்தாலும் இனி நிரந்த ஓட்டுநர் உரிமம் பெறமுடியும்.
தற்போதைய முறையின்படி, கற்றல் உரிமத்தை (LLR) எங்கிருந்தும் உருவாக்க முடியும். ஆனால், நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் என்பது அப்படி பெற முடியாது.
ஆதார் அட்டையில் எழுதப்பட்ட முகவரி படி சொந்த ஊர்களுக்கு சென்று அங்கிருக்கும் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்துக்கு நேரில் சென்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.
இதனால், தற்காலிக முகவரியில் இருப்பவர்கள் எல்எல்ஆர் இருந்தும் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல் தவிக்கின்றனர். மக்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, இந்த பெரிய மாற்றத்தை போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் எப்போது, எப்படி செயல்படுத்தப்படும்? என்பது குறித்து அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.