பத்து ஐபிஎல் அணிகளின் புதிய பெயர் மற்றும் லோகோ!
Chennai Super kings: சிஎஸ்கே அணியின் லோகோ அதன் வீரர்களைப் போலவே கர்ஜிக்கிறது. CSK ஆனது மஞ்சள் நிறத்தை அவற்றின் அடிப்படை நிறமாகத் கொண்டுள்ளது.
Delhi Capitals: டில்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்து கொண்டிருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் 2020 இறுதிப் போட்டி வரை சென்றது. ரிஷப் பந்த் தலைமையிலான அணி ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸால் தோற்கடிக்கப்பட்டது.
Kolkata Knight Riders: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை 2 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்த அணியின் உரிமையாளராக உள்ளார்.
Mumbai Indians: 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி மும்பை ஆகும். ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக உள்ளார்.
Punjab Kings: மொஹாலியை தலைமையிடமாக கொண்ட ஐபிஎல் அணி, முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்று பெயர் வைத்து இருந்தது. ஐபிஎல் போட்டியின் 14வது சீசனில் தனது பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியது.
Rajasthan Royals: அறிமுக ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்றது.
*வெளிநாட்டு கேப்டன் மற்றும் பயிற்சியாளரைக் கொண்ட முதல் அணி *பல சொந்த மைதானங்களைக் கொண்ட முதல் அணி *2008 இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் 217 ரன்களை சேஸ் செய்த முதல் அணியும் RR தான்.
Royal Challengers Bangalore: சந்தேகத்திற்கு இடமின்றி ஆர்சிபி ஐபிஎல் அணிகளில் மிகப்பெரிய ரசிகர்களைக் கொண்ட அணியாகும். அவர்களின் முதல் ஐபிஎல் கோப்பையை அவர்கள் இன்னும் வெல்லவில்லை.
Sunrisers Hyderabad 2013ல் முதல் ஐபிஎல் சீசனில் விளையாடியது. ஐபிஎல் 2016ல் தனது முதல் கோப்பையை RCBக்கு எதிராக வென்றது.
Lucknow Super Giants: சஞ்சீவ் கோயங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் உரிமையாளர். RPSG குழு, லக்னோ அணியை ஏலத்தில் INR 7090 கோடிகளுக்கு (932 மில்லியன் USDக்கு மேல்) வாங்கியது.
Gujarat Titans: குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர் சிவிசி கேபிடல், அகமதாபாத் அணியை ஏலத்தில் CVC கேபிடல் INR 5625 கோடி (692 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல்) கொடுத்து வாங்கியது. குஜராத் அணி உரிமையாளர் இன்னும் தங்கள் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவை வெளியிடவில்லை. ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.