மூன்று கிரக பெயர்ச்சி மாற்றத்தினால் வருகிற 2025 ஆண்டில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!
குருவின் பார்வையை லக்னாபதி பெறவிருக்கிறார், இதனால் பெண்கள் பல்வேறு துறைகளில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார்கள்.
குருவின் திரிகோண சஞ்சாரம் நீண்ட வருடங்களாகத் திருமணம் ஆகாதவர்கள் இதன் மூலம் விரைவில் நல்ல செய்தி கை கூடி வரும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும் இதனால் உறவில் மகிழ்ச்சி நிறையச் செய்கிறது.
கடன் தொல்லை தீராத நோய்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் சிக்கல்கள் உள்ளிட்ட அனைத்திலும் விடுபடும் நேரமாக அமையப்போகிறது.
சுக்கிரன் சனி சேர்க்கையால் திரைத்துறை ஊடகத்துறை தொடர்பு துறை தகவல் தொடர்பு துறை உள்ளிட்ட துறைகளில் பணி புரிபவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
உலக மக்களின் பொருளாதாரம் உயரும். மக்களிடையே எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். பொருளாதார தொழில் துறையில் நல்ல வளர்ச்சி செழிப்பாக அமையும்.
இந்த வருகின்ற 2025 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான ஆண்டு என்று கூறலாம் அந்த வகையில் இளைஞர்கள் அவர்களின் வேலை கல்வி சுகாதாரம் தொழில்துறை அனைத்திலும் அவர்களின் திறமையை உலகிற்குக் காட்டும் நிறமாக அவர்களுக்கு மாறப் போகிறது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.