புத்தாண்டு ராசிபலன் 2025 : கஜலட்சுமி யோகம்... 6 ராசிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி
ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடக்கப்போகிறது. இது கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்கும். புத்தாண்டில் (New Year Rasipalan 2025) உருவாகும் இந்த ராஜயோகம் 6 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான யோகத்தை கொடுக்கப்போகிறது.
மேஷம் : கஜலக்ஷ்மி ராஜயோகம் (Gajalakshmi Yoga) மேஷ ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த யோகத்தின் சுப பலன்களால் புத்தாண்டில் உத்தியோகத்தில் நல்ல சூழ்நிலை ஏற்படும். பொதுவாக எல்லா வேலைகளிலும் வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.
ரிஷபம் : ரிஷப ராசியினருக்கு குரு-சுக்கிரன் சேர்க்கையில் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகம், சுப பலன்களை கொடுக்கும். பொருளாதார நிலை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். இருப்பினும், பணியிடத்தில் கடின உழைப்பு மட்டுமே நன்மைகளைத் தரும்.
சிம்மம் : இந்த ராசிக்காரர்களுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் சிறப்பான நன்மை தரும். இந்த ராஜயோகத்தின் சுப பலன்களால், நீங்கள் உங்கள் தொழிலில் பெரிய சாதனைகளை அடையலாம். அரசியலுடன் தொடர்புடையவர்களுக்கு புத்தாண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
துலாம் : கஜலக்ஷ்மி ராஜயோகம் துலாம் ராசியினருக்கு மிகவும் மங்களகரமானதாகவும், பலனளிப்பதாகவும் இருக்கும். கூட்டுத் தொழிலில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில் முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.
தனுசு : கஜலக்ஷ்மி ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றத்தை தரும். வியாபாரத்தில் அபரிமிதமான பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். வியாபாரத்தில் அமோக லாபம் காண்பீர்கள்.
மீனம் : 2025 ஆம் ஆண்டின் கஜலக்ஷ்மி யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் வெற்றி பெறுவீர்கள். செல்வச் செழிப்பும் சொத்துக்களும் பெருகும். மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.