சின்னத்திரை பிரபலம் கண்மணி மற்றும் நவீனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Sat, 16 Apr 2022-4:47 pm,

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நவீனுக்கும், செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கண்மணிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

 

ஏற்கனவே இவர்களின் சில கியூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

இதுவரை நவீன்-பிந்து ரசிகர்களாக இருந்து வந்த பலரும், இவர்களின் திருமண அறிவிப்பிற்கு பிறகு நவீன்-கண்மணி ரசிகர்களாக மாறிவிட்டனர்.

 

இவர்களின் இந்த அழகிய புகைப்படங்களை பலரும் லைக் செய்து வருவதோடு, திருமண தேதி குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link