நந்த கோபால குமரனை நினைவிருக்கிறதா? என்.ஜி.கே படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு!

Wed, 31 May 2023-3:57 pm,

சூர்யா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம். என்.ஜி.கே (நந்த கோபால குமரன்)

அரசியல் சூழ்ச்சி மற்றும் துரோகம் ஆகியவை ஒரு மனிதனை மாற்றும் என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம் இது. 

சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடித்திருந்தனர். 

சூர்யா முதல் பாதியில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போராடும் இளைஞராகவும் அடுத்த பாதியில் ஹீரோயிசம் கலந்த வில்லனாகவும் நடித்திருப்பார். 

எல்லா செல்வராகவன் படத்தில் உள்ளது போல, இந்த படத்திலும் டார்க் காமெடி வசனங்கள் இருக்கும்.  

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கலவையான வசனங்களை பெற்று தோல்வியுற்றது. 

ஆனால், எப்படி செல்வராகவனின் படங்களை சில ஆண்டுகள் கழித்து கொண்டாடுவரோ அதே போல இதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link