Niagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்!

Thu, 25 Feb 2021-8:48 am,

கடந்த வாரம் நியூயார்க்கில் நயாகராவில் வெப்பநிலை -2F (-18C) ஆக வீழ்ச்சியடைந்த பின்னர், சுற்றுலாப் பயணிகள் வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில் வந்து குவிந்தனர்.

 

கடுமையான குளிர்கால புயல்கள் அமெரிக்காவின் பகுதிகளைத் தொடர்ந்து தாக்கியதால் நயாகரா நீர்வீழ்ச்சியின் பகுதிகள் உறைந்தன. இது ஒரு வினோதமான குளிர்கால அதிசயம்.

கடைசியாக நயாகரா நீர்வீழ்ச்சி 2017 இல் பனியால் மூடப்பட்டிருந்தது 22 அங்குலங்கள் பனி படிந்தது., நீர்வீழ்ச்சியும் சுற்றியுள்ள பகுதிகளும் பனியில் மூழ்கின  

தடிமனான பனிக்கட்டிகள் தண்ணீரில் மிதப்பதைக் காண முடிந்தது. 'போலார் வோர்டெக்ஸின்' விளைவாக, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலும் நீர்வீழ்ச்சியில் பனிக்கட்டிகள் ஏற்பட்டன.

கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா முழுவதும் பல மாகணங்களிலும் பனிப்பொழிவு ஏற்பட்டுல்ளது. அதிலும் குறிப்பாக, நியூயார்க்கில் அதிக அளவு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது, அடுத்த இரண்டு நாட்களில் நயாகராவில் மேலும் அதிக பனி உறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில படங்கள் நீர்வீழ்ச்சிகள் பனியால் கடினமாக உறைந்திருப்பதாகத் தோன்றினாலும், நீர் ஒருபோதும் பாய்வதை நிறுத்தவில்லை.

அரிதான ஆனால் வியப்பூட்டும் இந்த  காட்சியைக் கண்டு வியக்க பல சுற்றுலாப் பயணிகள் உலகின் மிக அழகான இடத்திற்கு தொடர்ந்து வருகை தருகின்ரனர். நயகரா நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் பனியைச் சுற்றி நீர் பாய்வதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

பொதுவாக ஜனவரி மாதத்தில் அமெரிக்காவையும் கனடாவையும் இயற்கையாகவே இணைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் பனி பாலங்கள் உருவாகின்றன.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link