Power War Starts: நானே மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி! சர்ச்சைகளின் நாயகன் நித்தியானந்தா….
தற்போதைய மடாதிபதி அருணகிரி, சில ஆண்டுகளுக்கு முன்னதாக நித்யானந்தா என்பவரை இளைய பீடாதிபதியாக அறிவித்தார். இதனால் மதுரை ஆதீனம் சர்ச்சைகளுக்குள் சிக்கியது. இருப்பினும் ஆதீனத்தை தேர்வு செய்வதில் தமக்கு முழு உரிமை உண்டு இதில் எவரும் தலையிட முடியாது என்று 292வது மடாதிபதி அருணகிரி தெரிவித்தார்.
இதையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகு அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. ஆனால் தானே 293 வது மடாதிபதி என்பதில் உறுதியாக இருக்கிறார் நித்தியானந்தா...
மருத்துவர், பொறியாளர்கள் அடங்கிய 50 சன்னியாசிகள் மதுரை மடத்தில் தங்கியிருந்து பணியாற்றுவார்கள் என்றும், மதுரை ஆதீன மடத்திற்கு 5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாகவும் நித்யானந்தா அறிவித்ததும் ஊடகங்களில் பல்வேறு விதமான வியூகங்கள் கிளம்பின
காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதின மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் நித்தியானந்தாவின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
தற்போதைய மடாதிபதி அருணகிரி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை ஆதீனம் விரைவில் குணமடைய வேண்டும் என தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நித்தியானந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாகவும் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.