லியோ படத்தால் திரையரங்கிற்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!
தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி உள்ளன. படம் நாளை வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ளது.
லியோ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகள் தணிக்கை செய்யப்படாத நிலையில் டிரெய்லரை தங்கள் திரைகளில் திரையிட்டன.
ரசிகர்களின் கொண்டாட்டத்தால் சில திரையரங்குகளில் இருக்கைகள் சேதமடைந்தன. மேலும், சிபிஎஃப்சியிடம் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த சர்ச்சைக்கு தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளார்.
இந்நிலையில், திரையரங்குகளில் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரைப்பட டிரெய்லர்களை திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இனிமேல், தணிக்கை செய்யப்பட்ட டிரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும்.