IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!

Tue, 05 Nov 2024-6:38 pm,

முக்கியமான தொடர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் (India vs Australia) மோதும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்த முறை 5 போட்டிகள் நடைபெறுகின்றன. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் தோற்றது இந்தியாவுக்கு இந்த தொடரை மேலும் முக்கியமாக்கி இருக்கிறது. 

 

முதல் போட்டி எப்போது?: இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது. தற்போதே கேஎல் ராகுல் (KL Rahul), துருவ் ஜூரேல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டனர், அவர்கள் வரும் நவ. 7ஆம் தேதி (நாளை மறுதினம்) இந்திய ஏ அணி சார்பாக ஆஸ்திரேலியா ஏ அணியுடன் மோதுவார்கள். இந்த போட்டி மெல்போர்னில் நடைபெறுகிறது. 

 

கேப்டனும்... புதிய ஓப்பனரும்...: முதல் போட்டியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) விளையாடுவது தற்போது உறுதியாகவில்லை. எனவே முதல் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்றாலும், ரோஹித் சர்மாவுக்கு பதில் பேட்டிங்கில் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran) களமிறங்குவார். அவருக்கு அதுதான் சர்வதேச அரங்கில் அறிமுக போட்டி எனலாம். இவருக்கு இடதுகை ஓப்பனராக யஷஸ்வி கைக்கொடுப்பார் எனலாம். ஜெய்ஸ்வாலுக்கும் இதுதான் முதல் ஆஸ்திரேலிய தொடராகும். 

 

விராட் கோலி மீள்வாரா? : சுப்மான் கில், விராட் கோலி (Virat Kohli) அடுத்தடுத்து களமிறங்குவார்கள். கில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கோலி நல்ல பார்மில் இல்லை. ஆஸ்திரேலியாவில் விராட் கோலிக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்பதால் அவர் அதில் பார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை. 

 

 

சர்ஃபராஸ் அவுட்...: ரிஷப் பண்ட்டுக்கு கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமே சிறப்பாக அமைந்தது. அவரும் நிச்சயம் இடம்பெறுவார். அதேபோல், சர்ஃபராஸ் கானுக்கு பதில் ஆஸ்திதரேலியாவில் ஏற்கெனவே அனுபவம் உள்ள கேஎல் ராகுல் களமிறங்குவார். 

 

ஆல்-ரவுண்டர்கள் யார் யார்?: கடந்த சில போட்டிகளாகவே அஸ்வின் சொதப்பி வருவதால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கலாம். அவர் கடந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியில் அஸ்வினுக்கு (Ravichandran Ashwin) பதில் விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜடேஜா அணியில் தொடர்வார். முதல் போட்டியில் இந்த இருவருமே சுழற்பந்துவீச்சாளர்கள் ஆவர். 

 

வேகப்பந்துவீச்சு படை: ஜஸ்பிரித் பும்ரா தான் (Jasprit Bumrah) வேகப்பந்துவீச்சை படையை வழிநடத்துவார். அவருடன் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் உடன் இருப்பார்கள். சிராஜின் பார்மை பொறுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கலாம். இல்லையெனில் பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். 

 

இந்தியாவின் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ஆகாஷ் தீப், முகமது சிராஜ்,

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link