இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு இல்லை ஏன் தெரியுமா?

Sat, 12 Oct 2024-1:10 pm,

ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி வரும் தேதியில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருச்சி ஸ்ரீரங்கம் முதல் திருப்பதி வரை அனைத்து கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த கோவில்களுக்கு சென்று பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வருவதை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வணங்குவார்கள். சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்து முடிந்த பிறகு பெருமாளுடன் சொர்க்க வாசல் வழியாகவும் வந்து வழிபடுவார்கள்.

பெருமாளின் சொர்க்க வாசல் திறப்பில் பங்கெடுப்பவர்களுக்கு மறைவுக்குப்பிறகு ஆத்மா நிச்சயம் சொர்க்கலோகத்தை அடையும் என்பது நம்பிக்கை. இதனால், ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பில் கலந்து கொள்பவர்கள் இந்த ஆண்டு எந்த தேதியில் சொர்க்கவாசல் திறப்பு வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம் தான் சொர்க்க வாசல் திறப்பு இருக்கும். ஆங்கில மாதத்தின்படி பார்த்தால் டிசம்பர் மாதம் வரும். ஆனால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அங்கில மாதத்தின்படி இந்த ஆண்டு வராது. அதாவது, 2024 ஆம் ஆண்டில் சொர்க்கவாசல் திறப்பே கிடையாது. 

2025 ஆம் ஆண்டு தான் சொர்க்கவாசல் திறப்பு இருக்கும். அடுத்த ஆண்டில் இரண்டுமுறை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. முதலாவது சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி மாதத்தில் நடக்கும்

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09, 2025 அன்று பிற்பகல் 12:22 முதல் ஜனவரி 10, 2025 அன்று காலை 10:19  மணியுடன் வைகுண்ட ஏகாதசி முடிவடைகிறது. அன்று இரவு தான் சொர்க்க வாசல் திறப்பு இருக்கும். 

அதேபோல் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் 30, 2025 அன்று காலை 07:50  மணிக்கு தொடங்கி  டிசம்பர் 31, 2025 அன்று காலை 05:00  மணிக்கு ஏகாதசி திதி முடிகிறது. 

ஆங்கில மாதத்தின்படி ஒரே ஆண்டில் இரண்டு முறை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அடுத்த ஆண்டு விஷேஷமான ஆண்டாக பார்க்கப்படுகிறது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link