இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் அசைவ உணவிற்கு தடை! எங்கு தெரியுமா?
குஜராத்தில் உள்ள பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வதும், சாப்பிடுவதும் குற்றம் ஆகும்.
அசைவ உணவுகளை தடை செய்துள்ள உலகின் முதல் நகரம் பாலிதானா ஆகும். அந்த பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை மூட கூறி 2014ல் துறவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறகு ஜெயின் சமூகத்தினரின் தொடர் போராட்டங்களுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் அசைவ உணவுகளுக்கு தடையை அறிவித்தது. யாராவது அசைவம் சாப்பிட்டால் அபராதம் விதிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவு ஜைன மதத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகின்றனர்.
அசைவ உணவின் தடைக்கு பிறகு அந்த பகுதியில் பல சைவ உணவகங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு வித விதமான சைவ உணவுகள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பாலிதானா நகரம் ஒரு முக்கிய ஜெயின் புனித தலமாகும். அசைவ உணவின் தடை அதன் புனிதத்தை பாதுகாக்கிறது. இருப்பினும் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.