North Korea தேசிய தினத்தில் வட கொரியர்கள் ஹஸ்மத் உடைகளுடன் அணிவகுப்பு
பியோங்யாங்கில் உள்ள கிம் இல் சுங் சதுக்கத்தில் ஆரஞ்சு ஹஸ்மத்தில் 'துணை ராணுவ மற்றும் பொது பாதுகாப்புப் படைகளின்' அணிவகுப்பு புகைப்படம்: (AFP)
கடந்த ஆண்டு அக்டோபரில், வடகொரிய ராணுவம் இரண்டு வருடங்களுக்கு பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியதால், கிம் ஜாங்-உன் அரசு முன்கூட்டியே ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
இந்த ஆண்டு ஜனவரியில் கிம் மற்றொரு இரவுநேர ராணுவ அணிவகுப்பை நடத்தியிருந்தார். எனினும் இந்த முறை வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களை காட்சிக்கு வைத்தது.
ஆரஞ்சு நிற ஹஸ்மத் பாதுகாப்பு உடையில் வடகொரிய ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினார்கள்.
வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டது.
புகைப்படங்கள் நாட்டின் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அடையாளப்படுத்தும் முகக்கவசங்களை ராணுவத்தினர் அணிந்திருப்பதைக் காட்டின. முன்னதாக நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரியாவின் உச்சத்தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருந்தார்.