அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை 25 முறையாக வெல்வேன்! சூளுரைக்கும் ஜோகோவிச் சாதனை
டென்னிஸ் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்த ஜோகோவிச்சின் மற்றுமொரு எட்டமுடியாத கிராண்ட்ஸ்லாம் சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நேர்செட்டில் மெட்விடேவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார்.
ஏற்கனவே 2011, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை வென்றிருந்த ஜோகோவிச், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அதிக வயதுடைய வீரர் என்ற பெருமையையைப் பெற்றார். ஜோகோவிச் வயது 36 என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) தனது அஞ்சலியை செலுத்தினார்.
போட்டிக்கு பின் ஓய்வு குறித்து மனம் திறந்து பேசிய ஜோகோவிச், எனது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது, முடிந்தவரை விளையாட திட்டமிட்டுள்ளேன் என்று கூறி, ஓய்வு பெறுவதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
தனது சமகால வீரர்களான ரஃபேல் நடால் (22), ரோஜர் பெடரர் (20) ஆகியோரை விட அதிக கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை பெற்றுள்ளார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபனை 10 முறையும், பிரெஞ்ச் ஓபனை 3 முறையும், விம்பிள்டனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 4 முறையும் வென்ற ஜோகோவிச், ஏற்கனவே ஆண்கள் ஓற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
தற்போது, வீராங்கனைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் (24 பட்டம்) சாதனையை சமன் செய்தார்
1968-ம் ஆண்டு அமெச்சூர் வீரர்களுடன், தொழில்முறை வீரர்களும் விளையாட அனுமதிக்கப்பட்ட 'ஓபன் எரா' காலத்தில், ஜோகோவிச் தனது பட்டங்கள் அனைத்தையும் வென்றுள்ளார். மார்கரெட், அமெச்சூர் எரா காலத்தில் 13 பட்டங்களும், ஓபன் எரா காலத்தில் 11 பட்டங்களும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற நோவாக் ஜோகோவிச் 24 கோடியே 75 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வென்றார். அதோடு, நேற்றைய தரவரிசைப்பட்டியலின்படி,மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார்.