செயலிழந்த NPS கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி?
NPS மூலம், ஒருவர் தன்னுடைய முதுமைக்கு தேவையான பெரிய நிதி மற்றும் ஓய்வூதியம் இரண்டையும் முன்னரே ஏற்பாடு செய்யலாம். இரட்டைப் பலன்களை வழங்கும் இந்தத் திட்டத்தில், பங்களிப்பின் போது ஏற்படும் சில தவறுகளால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம். இருப்பினும், முடக்கப்பட்ட கணக்கை (Account Freeze) நீங்கள் மீண்டும் இயக்கலாம். அதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
NPS க-இல் சேர, டயர் 1 கணக்கைத் திறக்க வேண்டியது அவசியமாகும். இதற்குப் பிறகு, உறுப்பினர் விரும்பினால், அவர் டயர் 2 கணக்கையும் திறக்கலாம். கணக்கு தொடங்கும் போது, நீங்கள் டயர் 1 இல் 500 ரூபாயும், டயர் 2 இல் 1000 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, டயர் 1 இல் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயும், டயர் 2 இல் ஆண்டுக்கு குறைந்தது 250 ரூபாயும் டெபாசிட் செய்ய வேண்டும்.
NPS -இல் அதிகபட்ச பங்களிப்புக்கு வரம்பு இல்லை. ஏதாவது ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை சந்தாதாரர் டெபாசிட் செய்யவில்லை என்றால், அவரது என்பிஎஸ் கணக்கு (NPS Account) முடக்கப்படலாம். அல்லது கணக்கு செயலிழக்கப்படலாம்.
முடக்கப்பட்ட கணக்கை மீண்டும் செயல்படுத்த, உறுப்பினர் UOS-S10-A படிவத்தை நிரப்ப வேண்டும். இந்த படிவத்தை தபால் நிலையத்திலும் அல்லது உங்கள் NPS கணக்கு இயங்கும் இடத்திலும் பெறலாம்.
ஆன்லைனிலும் இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு https://npscra.nsdl.co.in/download/non-government-sector/all-citizens-of-india/forms/UoS-S10A-Unfreezing%20of%20PRAN.pdf என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
சந்தாதாரர், தனது PRAN கார்டின் நகலையும் படிவத்துடன் இணைக்க வேண்டும். இது தவிர, சந்தாதாரர் வருடாந்திர பங்களிப்பின் நிலுவைத் தொகையை கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இதனுடன் ரூ.100 அபராதமும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, சந்தாதாரரின் கணக்கு அலுவலக அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். இதற்குப் பிறகு அவரது விண்ணப்பம் செயலாக்கப்பட்டு, PRAN செயல்படுத்தப்படும்.