எலும்புகளின் வலுவுக்கு ஏற்ற உணவுப் பொருட்கள்! இவை சக்தியின் இருப்பிடம்
நமது எலும்புகளுக்கு அற்புதமான பலத்தை தரும் பீன்ஸ். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸில் வைட்டமின் சி, வைட்டமின் டி, துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன
கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த சில உலர் பழங்களில் வைட்டமின் டியும் உள்ளது, இது எலும்புகளுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். ஆனால் கோடைக்காலத்தில் அதிகமாக உண்ண வேண்டாம்
கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன், புரதமும் நிறைந்துள்ள முட்டை, எலும்புகளை வலுப்படுத்துவதோடு தசைகளையும் பலப்படுத்துகிறது.
அனைத்து வகையான சத்துக்களும் பாலில் இருந்தாலும், அதில் உள்ள கால்சியம் நமது எலும்புகளுக்கு நன்மை பயக்கும். தினமும் ஒரு டம்ளர் பால் குடித்தால், அது உடல் எலும்புகளை வலுப்படுத்தும்
இனிப்பு சுவைக்கு வெல்லத்துக்கு மாற்றாக வெள்ளைச் சர்க்கரையை பயன்படுத்துகிறார்கள். உண்மயில் வெள்ளை சர்க்கரை என்பது வெறும் சக்கைதான். ஆனால் வெல்லத்தி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், அது எலும்புகளுக்கும் நன்மை பயக்கும்.