ஒக்கடு முதல் ஆர்யா வரை! பிரபாஸ் நிராகரித்து ஹிட்டான 4 படங்கள்!

Sun, 30 Jun 2024-4:54 pm,

பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் சரியாக போகாத பட்சத்தில் 'கல்கி 2898 கிபி' படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒக்கடு

மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் ஒக்கடு. முதலில் இந்த படத்தில் பிரபாஸ் நடிக்க இருந்தார், பிறகு நிராகரித்துள்ளார்.

சிம்மாஹாத்ரி

இந்த அதிரடி ஆக்சன் படம் ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட் அடித்து ஜூனியர் என்டிஆருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஆனால் முதல் இந்த படத்தில் பிரபாஸ் தான் நடிக்க இருக்கார்.

ஆர்யா

ரொமாண்டிக் ஆக்‌ஷன் படமாக உருவாகிய ஆர்யா படத்தில் முதல் பிரபாஸ் தான் நடிக்க இருந்தார். பின்னர் அந்த படத்தில் அல்லு அர்ஜுன் நடித்தார். இந்த படம் பல நாட்கள் திரையரங்கில் ஓடியது.

நாயக்

நாயக் படத்தில் ராம் சரண் நடித்து இருந்தார். முதலில் இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் சம்மதம் தெரிவித்து இருந்தார். பின்னர் வேறு படத்தின் கால் சீட் காரணமாக நடிக்க முடியாமல் போனது.

பிருந்தாவனம்

2010ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் மற்றும் சமந்தா, ஆகியோர் நடித்து இருந்தனர். முதலில் இந்த படத்தில் பிரபாஸ் நடிக்க இருந்து பின்னர் கைமாறி போனது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link