84 ரூபாய்க்கு வீடு வாங்குவது எப்படி? குருநாதா இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது

Mon, 25 Mar 2024-10:59 pm,

வீடு என்றாலே பல லட்சம் முதல் பல கோடி ரூபாய் மதிப்பில் தான் இப்போதெல்லாம் கட்டப்படுகிறது. சொகுசு வசதிகளை வீட்டுக்குள் சேர்க்க சேர்க்க அதற்கான செலவுத் தொகையும் உயரும். 10 லட்சம் ரூபாய் குறைந்தபட்சம் ஒரு வீடு கட்ட தேவை.

 

அப்படி இருக்கும்போது அமெரிக்காவில் வெறும் 84 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்த திட்டம் அமெரிக்காவில் 1970 களில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ஆகும். இப்போது இந்தத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

பால்டிமோர் நகரில், 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக உள்ளன. அவற்றில் 1,000 வீடுகள் பால்டிமோர் நகரத்திற்குச் சொந்தமானவை. இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகள் நகரத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒரு டாலர் விலை கொடுத்து வாங்கலாம்.

 

ஒரு டாலருக்கு காலியாக உள்ள வீட்டை வாங்குபவர்கள், அதற்குப் பின் தங்கள் சொந்தச் செலவில் அந்த வீட்டைச் சரிசெய்து புதுப்பிக்க வேண்டும். மேயர் பிராண்டன் ஸ்காட் இந்த திட்டத்தை ஆதரித்து ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தில் 200 வீடுகள் அவற்றைப் பழுதுபார்த்து வசிக்க முன்வரும் மக்களுக்கு விற்கப்படும்.

 

இந்த புதிய திட்டத்தின் மூலம், குடியிருப்பாளர்கள் காலியாக உள்ள வீடுகளை வாங்கி அவற்றை சரிசெய்வார்கள் என நகரத்தார் நம்புகின்றனர். இருப்பினும், இந்தத் திட்டம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. சிறிய லாப நோக்கற்ற நிறுவனங்கள் 1,000 டாலருக்கு வீடுகளை வாங்கலாம். டெவலப்பர்கள் மற்றும் பெரிய லாப நோக்கமற்றவர்கள் இந்த வீடுகளில் ஒன்றை வாங்க 3,000 டாலர் செலுத்த வேண்டும்.

 

இந்தத் திட்டத்திற்கு வரவேற்பு இருந்தபோதிலும், நகர சபைத் தலைவர் நிக் மோஸ்பி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வீடுகளை பொதுமக்களுக்கு விற்க முன்னுரிமை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

 

"இது ஒரு மோசமான கொள்கை, ஏனெனில் இது சமூகத்தில் உள்ளவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது முன்னுரிமை அளிக்கவோ இல்லை" என அவர் நிக் மோஸ்பி விமர்சித்துள்ளார்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link