சிறுவயதில் ‘கொழுக்-மொழுக்’ என்றிருக்கும் பிரபல நடிகை! யாரென்று தெரிகிறதா?
)
மலையாள திரையுலகில் பிரபலமான கதாநாயகியாக இருப்பவர், கல்யாணி பிரியதர்ஷன். இவரது பழைய புகைப்படம்தான் இது.
)
மலையாளத்தில் பிரபல நடிகராக விளங்கும் பிரியதர்ஷனின் மகள்தான், இந்த கல்யாணி. இவர், இந்தியில் கிரிஷ் 3 படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு வெளியான ‘இருமுகன்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவர், சிறுவயதில் கொஞ்சம் கொழுக் மொழுக் பெண்ணாக இருந்தார்.
)
சிறுவயதில் இருந்த தோற்றத்தை, கல்யாணி இளம் பெண்ணாக மாறியவுடன் மாற்றிக்கொண்டார். இதற்காக அவர் பல்வேறு கடினமான முயற்சிகளை மேற்கொண்டார்.
சரியான டயட், உடற்பயிற்சிகள் மூலம் அவருக்கு இந்த மாற்றங்கள் ஏற்பட்டது. கல்யாணி, தமிழில் ஹீரோ படம் மூலம் அறிமுகமானார்.
மாநாடு, புத்தம் புது காலை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். இருப்பினும், பெரும்பாலும் இவர் மலையாள படங்களிலேயே நடித்திருக்கிறார்.
2022ஆம் ஆண்டில் இவர் நடித்த ஹ்ரிதயம் படம், தென்னிந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது.
கல்யாணி பிரியதர்ஷன், இப்போதும் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.