OnePlus 8T: இந்தியாவில் அதன் விலை, அம்சங்கள், கேமிரா, பிற முக்கிய தகவல்கள்

Fri, 23 Oct 2020-6:37 pm,

இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் 8T விலை 8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ .42,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, 12GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் மாடல் வாங்க ரூ .45,999 செலவாகும். 

ஒன்பிளஸ் 8T, Full HD+ 120hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது அற்புதமான விஷுவல் எபெக்டுகள் மற்றும் மிகச்சிறந்த கேமிங் செயல்திறனை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. ஸ்மார்ட்போன் வளைந்த வடிவமைப்பிற்கு பதிலாக பிளாட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் எஃப் / f/1.7 அபெர்சர் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது; f / 2.2 அபெர்சர் கொண்ட இரண்டாவது 16 மெகாபிக்சல் கேமரா; மூன்றாவது 5 மெகாபிக்சல் கேமரா மற்றும் நான்காவது 2 மெகாபிக்சல் கேமரா. செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது இதில் f/2.4  அபெர்சர் கொண்டுள்ளது.

இது சமீபத்திய  Qualcomm Snapdragon 865 மூலம் இயக்கப்படுகிறது.  Snapdragon 865+ ப்ராஸருக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது . இது 12 GB RAM மற்றும் 256 GB UFS 3.1 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த கேமிங் செயல்திறனுக்காக இது 285 சதவீதம் பெரிய வேப்பர் சாம்பர் உள்ளது. ஸ்மார்ட்போன் மிகச்சிறந்த இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

OnePlus 8T 4500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 65W வார்ப் சார்ஜ் திறன் கொண்டது. ஒரு நாளுக்கு தேவையான சார்ஜை 15 நிமிடங்களில் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link